ஆளுனரின் பதவி நீக்க விவகாரம் ஜனாதிபதியுடன் தொடர்புடையது – பந்துல குணவர்தன!
ஆளுனர்களின் நியமனம் பதவி நீக்கம் என்பன எம்முடன் தொடர்புடைய விடயமல்ல. அவை முழுமையாக ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளவையாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வடமேல், கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாண ஆளுனர்களை பதவி விலகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மேற்படி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த சனிக்கிழமை திருகோணமலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹாம்பத், ‘கிழக்கிலிருந்து ஆளுனராக உங்களை சந்திக்கும் இறுதி நாள் இதுவென்று எண்ணுகின்றேன்.’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவும் புதிய ஆளுனர்கள் நியமிக்கப்படக் கூடும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும் வட மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா இதனை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.