ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களை தேடும் அரசாங்கம்
ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகின்றன.
3 வது நாட்டில் இருந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை ஜெர்மனிய நாட்டிற்கு அழைப்பது தொடர்பான விடயங்கள் தற்பொழுது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதற்காக புதிய சட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகதிகளாக ஜெர்மனி நாட்டில் தங்கி இருப்பவர்களுக்கும் இந்த சட்டம் சில சலுகைகளை வழங்குகின்றது.
ஜெர்மனியின் கூட்டு அரசாங்கமானது பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் பற்றாக்குறையை போக்குவதற்காக மந்திரி சபையில் புதிய சட்டத்திற்கு தனது இணக்கப்பாடை தெரிவித்துள்ளது.
அதாவது 3 வது நாடுகளில் இருந்து இலகுவான முறையில் இந்த நாட்டுக்குள் வந்த பின் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய சட்டமானது இடமளிக்கப்படடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டமானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.