ஜெர்மனியில் இளைஞர்களுக்கு பண உதவி வழங்கும் அரசாங்கம்
ஜெர்மனியில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அரசாஙகம் பண வழங்குகின்றது.
இதற்கான அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கொவிட் காலங்களில் பல இளைஞர் யுவதிகள் பாதிக்கப்பட்டு மன அழுத்தங்களுக்க உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகியவர்களை மன அழுத்தங்களில் இருந்து விடுவிப்பதற்காக ஜெர்மன் அரசாங்கமானது புதிய திட்டம் ஒன்றை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதாவது 2005 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு 200 யூரோக்கள் பெறுமதியான குட் ஷைன் என்று சொல்லப்படுகின்ற பண அட்டை ஒன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு 200 யூரோ பெறுமதியான பண அட்டை வழங்கப்படும் என்றும், 2006 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு 100 யூரோ பெறுமதியான பண அட்டைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.