சிங்கப்பூரில் இணையக் குற்றங்களை தடுப்பதற்காக அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
சிங்கப்பூர் பொலிஸார் இணையக் குற்றங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதற்கமைய, தேசியச் சேவையில் புதிய வேலையை அறிமுகம் செய்யவிருக்கிறது.
இவ்வாண்டுப் பிற்பகுதியில் நடப்புக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது.
மிரட்டல்களை அடையாளம் காண்பது, மோசடிகளைத் தடுப்பது போன்ற பணிகளைத் தேசியச் சேவையாளர்கள் மேற்கொள்வர்.
இவ்வாண்டின் பொலிஸ் பிரிவு வேலைத்திட்டக் கருத்தரங்கில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) இதனை அறிவித்தார்.
அந்தப் பணியில் ஈடுபடுவோர் சேவைக்காலம் முடிந்த பிறகு மின்னிலக்கப் பொருளாதாரத்தில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும் என்றார் அவர்.
இணையக் குற்றங்களைத் தடுப்பதில் பொதுமக்களையும் ஈடுபடுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
பொலிஸார் ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் செய்ய முடியாது, எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்று துணைப் பிரதமர் ஹெங் கூறினார்.