யூடியூப் கிரியேட்டர்ஸ்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – ஷார்ட்ஸில் 5 புதிய அம்சங்கள்

யூடியூப் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி ஷார்ட்ஸ்-ஐ மேம்படுத்தி வருகிறது. இது படைப்பாளர்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் ஷார்ட்ஸ் வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்க உதவுகிறது. சமூக ஊடக பயனர்களின் கவனச்சிதறல் தொடர்ந்து குறைந்து வருவதால், யூடியூப் முன்னணியில் இருக்க புதுமையை அறிமுகப்படுத்துகிறது.
இதில் கூகிள்டீப் மைண்ட் உருவாக்கிய புதிய AI- இயங்கும் கருவிகளும் அடங்கும். இந்த AI கருவிகள் படைப்பாளர்களுக்கு தங்கள் உள்ளடக்கத்திற்கு ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை சேர்த்து, தங்களது திறமைகளை வெளிப்படுத்த புதிய வழிகளைத் திறக்கும்.
முன்னதாக, யூடியூப் Veo-ஐ அறிமுகப்படுத்தியது, இது பயனர்கள் எளிய உரைக் கட்டளையைக் கொடுப்பதன் மூலம் ஷார்ட்ஸ்-க்கு பச்சை திரை பின்னணியை சேர்க்க அனுமதித்தது. மேலும் சமீபத்தில் இது Veo 2ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்கள் 6 வினாடி வீடியோ கிளிப்களை உருவாக்க அனுமதிக்கிறது. “இந்த படைப்புகள் SynthID ஐ பயன்படுத்தி வாட்டர்மார்க் செய்யப்படும். மேலும் இது AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதை பார்வையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கும் லேபிளை நாங்கள் பயன்படுத்துவோம்,” என்று யூடியூப் கூறியது.
நீங்கள் யூடியூப்பில் கண்டெட் கிரியேட்டராக இருந்தாலும் சரி, இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றாலும் சரி, ஷார்ட்ஸில் விரைவில் வரவிருக்கும் புதிய அம்சங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 அம்சங்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்..
Improved Video Editor: YouTube, Shorts-க்கான அதன் பயன்பாட்டில் உள்ள வீடியோ எடிட்டிங்கை மேம்படுத்தியுள்ளது. இப்போது, படைப்பாளிகள் வீடியோ கிளிப் நேரங்களைத் திருத்தலாம், இசை அல்லது நேரக் குறியிடப்பட்ட உரையைச் சேர்க்கலாம், கிளிப்களை பயன்பாட்டிற்குள் மறுசீரமைக்கலாம் அல்லது நீக்கலாம். இதன் மூலம் உள்ளடக்கத்தை கூர்மையாகவும், அதிக ஈடுபாடு உள்ளதாகவும் மாற்றலாம்.
Align clips with music: இந்த புதிய அம்சம், வீடியோ மற்றும் பாடலை கைமுறையாக ஒத்திசைக்க வேண்டிய தொல்லையின்றி, கிளிப்களை இசையின் தாளத்துடன் தானாகவே சீரமைக்க உதவுகிறது.
Use photos in templates: “டெம்ப்ளேட்களில் புகைப்படங்களைப் பயன்படுத்துதல்: கிரியேட்டர்கள் இப்போது தங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களைப் பயன்படுத்தி, டெம்ப்ளேட்களில் புதிய எஃபெக்ட்களுடன் டெம்ப்ளேட்களை உருவாக்கலாம். நீங்கள் ஒரு ஷார்ட்ஸ் டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தும்போது, அசல் கிரியேட்டரின் பெயர் தானாகவே குறிப்பிடப்படும்,” என்று YouTube கூறியது.
Image Stickers: “பட ஸ்டிக்கர்கள்: கிரியேட்டர்கள் ஷார்ட்ஸில் புதிய பட ஸ்டிக்கர்களைப் பயன்படுத்துவதன் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். எனவே, உங்கள் ஷார்ட்ஸில் கூடுதல் உள்ளீடுகளைச் சேர்க்கலாம் மற்றும் பட ஸ்டிக்கர்களுடன் உங்கள் ஷார்ட்ஸுக்கு தனித்துவத்தை சேர்க்கலாம்.”
AI stickers: “AI ஸ்டிக்கர்கள்: இப்போது, கிரியேட்டர்கள் ஒரு எளிய உரைக் கட்டளையை டைப் செய்வதன் மூலம் தங்கள் வீடியோக்களை இன்னும் தனித்துவமாக்க முடியும். இது பயனர்களுக்கு அவர்களின் ஷார்ட்ஸில் பயன்படுத்த தனித்துவமான AI மூலம் உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர்களை வழங்கும்.”
வேற என்ன இருக்கு?
இதோடு சேர்த்து, யூடியூப், யூடியூப் ஸ்டுடியோவில் உள்ள இன்ஸ்பிரேஷன் டேப்-ஐ மேம்படுத்த ஜெனரேட்டிவ் AI உதவியுடன் ‘பிரைன்ஸ்டார்மிங்’யை உருவாக்கி, கிரியேட்டர்கள் புதிய ஐடியாக்கள், டைட்டில்கள் மற்றும் தம்ப்னெயில்களை உருவாக்கவும் உதவுகிறது. இருப்பினும், இந்த அம்சங்களை வெளியிடுவதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை இன்னும் வழங்கவில்லை.