ஜெர்மனியில் இளைஞர், யுவதிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல் – 1000 யூரோ நிதி கொடுப்பனவு
ஜெர்மனியில் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளும் இளைஞர்-யுவதிகளுக்கு 1000 யூரோ நிதியுதவி வழங்கவுள்ளதாக பசுமை கட்சி தெரிிவத்துள்ளது.
பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள பல்வேறு சலுகைகள் கட்சிகளால் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் பசுமை கட்சியின் தலைவர் ஊடக சந்திப்பு ஒன்றின் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தொழில் பயிற்சி கல்வியை மேற்கொள்வோர் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக 1000 யூரோ நிதி உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் பெறுகின்றவர்கள் அவர்களது தொழில் வழங்குனர்கள், வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு மேலதிகமாக 500 யூரோக்களை வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1000 யூரோக்களை நிதி உதவியாக வழங்குவதற்கு கோடிஸ்வரர்களுக்கான வரி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்
புதிய திட்டத்தின்படி 1000 யூரோக்களை வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு இளைஞர் யுவதிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.