இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், நேற்றைய தினம் தங்கத்தின் சற்று வீழ்ச்சியினைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் நேற்றைய தினம் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 187,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 172,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 23,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 21,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது





