சிங்கப்பூரில் கற்கும் மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
சிங்கப்பூரில் படிப்பை முடித்த மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணங்களை நீட்டிப்பது குறித்து பொதுப் போக்குவரத்து சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகளிடமிருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் பரிசீலனை நடத்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.
மாணவர்கள் அடுத்த கட்டமாக வேலையையோ படிப்பையோ தேர்ந்தெடுக்கும் காலம் வரை அது உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடக்கப்பள்ளி, உயர்நிலை பாடசாலை, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் தற்போது பயன்படுத்தும் சலுகைக் கட்டண அட்டைகளை வேண்டுமானால் வரும் செப்டம்பரிலிருந்து Simply-Go அட்டைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
SimplyGo செயலியின்வழி அட்டையில் பணம் நிரப்ப அது உதவும் என குறிப்பிடப்படுகின்றது.





