ஜெர்மனியில் உதவித் தொகை பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஜெர்மனியில் சமூக உதவி தொகை அதிகரிக்கப்படும் என கருத்துக்கள் வெளியாகியது.
2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சமூக உதவி பணத்தை பெற்றுக்கொள்கின்றவர்களுக்கு அரசாங்கமானது கூடுதலான நிதியத்தை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்பொழுது வேலை செய்கின்றவர்களுக்கு இந்த அரசாங்கமானது இந்த வகையான சலுகைகளை பெற்றுக்கொடுக்கம என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளையில் ஜெர்மனியின் நிதி அமைச்சர் கிறிஸ்டியானோ லின் அவர்கள் புதிய தொரு திட்டத்தை தாம் வெகு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதாவது வருமான வரியை குறைக்கவுள்ளதாகவும், இந்நிலையில் அடிப்படை வருமானம் பற்றிய ஒரு தகவலை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அடிப்படை வருமானத்தை கொண்டவர்களில் மேலதிக வருமானத்தை மட்டும் கொண்டிருந்தால் மட்டுமே இந்த வருமான வரியை செலுத்த வேண்டும் என்ற வகையில் இந்த புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளார்.
எனவே ஒரு அடிப்படை வருமான வரி திட்டம் உள்ளதாகவும், புதிய சட்டத்தின் மூலம் அடிப்படை வருமானத்துடைய தொகையை தான் அதிகரிக்க வுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.