ஜெர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஜெர்மனியில் ஓய்வூதியம் தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு விஷேட சலுகை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் எவர் ஒருவர் தனது உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டிருப்பின் அவர் தனது ஓய்வு காலத்துக்கு முன்னதாகவே குறித்த ஓய்வு ஊதிய தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு 7ஆம் மாதம் முதலாம் திகதியில் இருந்து எவர் ஒருவர் தனது உடல் பாதிப்பின் காரணமாக ஓய்வு காலத்துக்கு முன்னதாகவே ஓய்வு ஊதியத்தை பெறுவதாக இருந்தால் இந்த தொகையானது அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அடுத்த ஆண்டு 7ஆம் மாதம் முதலாம் திகதியில் இருந்து எவேட் விண்டர் என்று சொல்லப்படுகின்ற ஓய்வு ஊதியத்தை பெறுகின்றவர்களுக்கு மாதாந்தம் தலா 70 யுரோக்கள் உயர்வாக வழங்கப்படும் என்று தெரியவந்திருக்கின்றது.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டினுடைய புதிய சட்டத்தின் படி 3 மில்லியன் ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களுக்கும் மேலதிகமான பணம் வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் உடல் உபாதைகளுக்கு உள்ளானவர்கள் தங்களது வாழ்க்கை செலவை ஈடுசெய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.