அமெரிக்காவில் சுற்றுலா விசாவில் செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு விதமான விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விசாக்களில் எச்1பி விசா அதாவது தற்காலிக விசாவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
அதுமட்டுமல்லாமல் சுற்றுலா விசா மற்றும் வணிக விசாவில் ஏராளமானோர் அமெரிக்காவிற்குச் சென்று வருகிறார்கள்.
ஆனால், இவர்கள் குறிப்பிட்ட காலம் வரையில் தான் அங்கு இருக்க முடியும். அதனால், அமெரிக்காவிற்கு செல்பவர்கள் அங்கு பணிபுரிவதற்கு அனுமதி இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் அமெரிக்க விசாவில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டு, வணிக மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் தனிநபர், வேலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
அத்துடன், தற்காலிக விசாவில் அமெரிக்காவில் இருப்பவர்களும் அங்கு பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் புதிய வேலை வாய்ப்பை தொடங்கும் வணிகம் மற்றும் சுற்றுலா விசாவை வேலைவாய்ப்பு அங்கீகரிக்கப்பட்ட நிலைக்கு மாற்றுவதற்கு மனு மற்றும் கோரிக்கை அளித்து அனுமதி பெற வேண்டும்.
இருப்பினும், இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அந்த நபர் அமெரிக்காவை விட்டு வெளியேறி பின்னர் புதிய வேலை வாய்ப்பை பெறுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.