ஆப்பிரிக்காவில் கொட்டிக்கிடக்கும் தங்கம் – அரபு நாடுகளுக்குப் பல நூறு டன் தங்கம் கடத்தல்
ஆப்பிரிக்காவிலிருந்து ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான டன் தங்கம் கடத்தப்படுவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு 2,500 டன்னுக்கு அதிகமான தங்கம் கடத்தப்பட்டுள்ளது.
Swissaid அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடத்திய தங்கத்தின் மதிப்பு 115 பில்லியன் டொலரைவிட அதிகமாகும்.
2022ஆம் ஆண்டு 435 டன் தங்கம் கடத்தப்பட்டதாக Swissaid குறிப்பிட்டுள்ளது.அதில் 405 டன் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு அனுப்பப்பட்டது.
கடத்தப்படும் தங்கம் குறிப்பாகத் துபாய்க்குச் செல்வதாக Swissaid கூறியது. ஆப்பிரிக்கத் தங்க வரத்தகத்துக்கு முக்கிய நடுவமாக இருக்கும் துபாயிலிருந்து அந்த தங்கம் சுவிட்சர்லந்து போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
உலகில் ஆக அதிகமான தங்கம் ஆப்பிரிக்காவில் கிடைக்கிறது. தங்கக் கடத்தலால் சுரங்கத்தில் வேலை செய்யும் மில்லியன்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக Swissaid கூறியது.