வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் தாக்கத்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,357.40 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.





