சிங்கப்பூரில் தங்கம் விலையில் மாற்றம் – 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவு

சிங்கப்பூரில் தங்கம் விலை 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை நிலவரப்படி, 24 கேரட் ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை 81.40 வெள்ளிக்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதன் விலை 78.60 வெள்ளி என்று சரிவை சந்தித்தது.
அது மேலும் சரிந்து திங்கள்கிழமை நிலவரப்படி 78.30 வெள்ளி என்ற நிலையில் விற்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த வார இறுதியில் நகை கடைகளில் நல்ல கூட்டம் இருந்ததை காண முடிந்தது.
மேலும், விலை குறையும் பட்சத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 13 times, 1 visits today)