இங்கிலாந்தின் விமான நிலையத்தில் இருந்து £2 மில்லியன் மதிப்புள்ள தங்க கட்டிகள் மீட்பு!
இங்கிலாந்தில் மென்செஸ்டர் விமான நிலையத்தில் (Manchester Airport) £2 மில்லியன் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி விமான நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இருந்து 07 தங்க கட்டிகளை மீட்டுள்ளனர். அதன் மதிப்பு £700,000 புவண்ட்ஸ் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரேட்டர் மென்செஸ்டர் (Greater Manchester) காவல்துறை சம்பவம் தொடர்பில் இருவரை நேற்று இரவு கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 49 மற்றும் 45 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடைய உடமைகளை சோதனை செய்தபோது 01 மில்லியன் மதிப்புள்ள தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காவல்துறையினர் பணமோசடி தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.





