ஐரோப்பா

உலகளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – 15 ஆண்டுகள் காணாத நெருக்கடி

உலகளாவிய அரிசி விலை உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 ஆண்டுகள் காணாத அளவில் அரசி விலை அதிகரித்துள்ளது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் விலை 9.8 சதவீதம் உயர்ந்ததாக உணவு, வேளாண் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

உலகின் ஆகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா குறிப்பிட்ட அரிசி வகைகளுக்கு ஏற்றுமதித் தடை விதித்திருந்தது.

அது வர்த்தகத்தில் தடை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்கமுடிவதாக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதித் தடை எத்தனை நாள் நீடிக்கும் எனக் குழம்பும் விநியோகிப்பாளர்கள் சில இருப்புகளைத் தக்கவைத்திருக்கலாம் அல்லது விலைகளைக் கூட்டியிருக்கலாம் என்று கூறப்பட்டது.

உலகில் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியில் 40 விழுக்காடு இந்தியாவிலிருந்து வருகிறது. அது பாஸ்மதி அல்லாத மற்ற வெள்ளை அரிசி வகைகளுக்கு ஜூலையில் ஏற்றுமதித் தடைவிதித்திருந்தது.

கொரோனா தொற்றுச் சூழல், உக்ரேன் விவகாரம், El Nino எனும் பருவநிலை நிகழ்வு ஆகியவற்றாலும் அரிசி விலை ஏறியுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!