கைது செய்யப்பட்ட காதலனை மீட்க காதலி செய்த செயல்..!

குடிபோதையில் வந்த 25 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களை அம்பலாங்கொடை பொலிஸார் சனிக்கிழமை (20) இரவு கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த இளைஞர்களை மீட்பதற்காக இளைஞன் ஒருவரின் காதலியான யுவதி ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளார்.
அத்துடன், அவரையும் கைது செய்ய முற்பட்ட இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தரை கடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரையும் சனிக்கிழமை (21) பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் முன்னிறுத்திய போது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
(Visited 22 times, 1 visits today)