பணத்திற்காக காதலனை விற்பனை செய்த காதலி – சீனாவில் அதிர்ச்சி சம்பவம்

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், 100,000 யுவான் பணத்திற்காக தனது காதலனை மியன்மார் மோசடி கும்பலிடம் விற்ற அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 19 வயது ஹுவாங், 17 வயதான சோவுடன் காதல் உறவில் இருந்துள்ளார். இருவரும் ஒன்றாக வசிக்கத் தொடங்கினர். பின்னர், சோவின் வற்புறுத்தலால் ஹுவாங் வேலை வாய்ப்புக்காக மியன்மாருக்கு செல்லத் திட்டமிட்டார்
உறவினர்களிடம் எதுவும் சொல்லாமல் ஹுவாங், சோவுடன் தாய்லந்துக்குச் சென்றார். ஆனால் அங்கிருந்து அவர் மியன்மாரில் உள்ள இணையவழி மோசடி கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டா
மோசடி கும்பலிடம் ஹுவாங் நான்கு மாதங்களுக்கு அவதிப்பட்டதாகத் தெரிகிறது. அவரை அடித்து சித்திரவதை செய்ததில், செவிதிறனை இழந்துள்ளார். ஒருநாள் கைத்தொலைபேசி வாயிலாக குடும்பத்தினரைத் தொடர்புகொண்ட ஹுவாங், தனது நிலையை தெரிவித்தார்
அதனைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மியன்மாரில் உள்ள கும்பலுடன் பேரம் பேசினர். சுமார் 350,000 யுவான் செலுத்தி ஹுவாங் வீடு திரும்பச் செய்யப்பட்டா
இந்த தகவலை ஹுவாஙின் சகோதரி, சீன சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்
தனது காதலனை பணம் பெறும் நோக்கில் மோசடி கும்பலிடம் ஒப்படைத்த சோ மீது அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. .ர்..ர்..