ஜெர்மனியில் அறிமுகமாகும் டிஜிட்டல் அடையாள அட்டை – மக்களுக்கு புதிய வசதி
ஜெர்மனி குடிமக்கள் தங்கள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி டிஜிட்டல் அடையாள அட்டையை காட்ட அனுமதிக்கும் ஒரு பயன்பாட்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
ஜெர்மன் குடியுரிமை உள்ளவர்கள் விரைவில் EUDI-Wallet என்ற புதிய கையடக்க தொலைபேசி செயலியைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தங்களை அடையாளம் காண முடியும் என்று ஜெர்மன் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
16 வயது முதல் அனைத்து குடிமக்களும் எடுத்துச் செல்ல வேண்டிய அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிப்பை இந்த செயலி சேமிக்கும். அதிகாரப்பூர்வ ஆவணங்களைச் சேமிக்கப் பயன்படுத்தலாம் மற்றும் அடையான அட்டைதாரரின் கையொப்பத்தின் டிஜிட்டல் பதிப்போடு இணைக்கப்படும்.
இந்தச் செயலியானது, தினசரி நிர்வாகப் பணிகளை எளிமையாக்க பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 48 times, 1 visits today)





