உக்ரைனுக்கு 3 பில்லின் பெறுமதியான இராணுவ உதவியை வழங்கும் ஜெர்மனி!
ஜெர்மனி, உக்ரைனுக்கு ஏறக்குறைய 3 பில்லியன் பெறுமதியான இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாங்கிகள், விமான எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட 2.7 பில்லியன் யூரோக்கள் ($3 பில்லியன்) மதிப்புள்ள கூடுதல் இராணுவ உதவியை ஜெர்மனி உக்ரைனுக்கு வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி, ஜெர்மனிக்கு பயணிக்கவுள்ளார். இந்த நிலையில், மேற்படி அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ், உக்ரைனுக்கு “ஜேர்மனி தனது ஆதரவில் தீவிரமாக உள்ளது” என்பதை சமீபத்திய ஆயுதப் பொதியுடன் காட்ட விரும்புகிறது என்று கூறினார்.
“ஜெர்மனி தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)