ஜெர்மனிக்கு மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்கள் தேவை

ஜெர்மனி நாட்டுக்கு ஒரு மில்லியனுக்கு மேலான வெளிநாட்டவர்கள் தேவை என்ற விடயம் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியின் முன்னனி பொருளாதார வல்லுனர்களின் கருத்து படி அதாவது ஷில்ஸ்செல்பர் கருத்து தெரிவிக்கையில்
ஜெர்மன் நாட்டுக்கு வருடம் ஒன்றுக்கு 1.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் தேவைப்படுவதாக கூறியிருக்கின்றார்.
அதாவது 15 லட்சம் இவ்வாறான வெளிநாட்டவர்கள் ஜெர்மன் நாட்டுக்கு வந்தால் மட்டுமே ஜெர்மன் நாட்டில் இருந்து தங்களது நாட்டுக்கு அல்லது வேறு நாட்டுக்கு போகின்றவர்களுடைய தொகையை கழிக்கும் பொழுது மீதியாக 4 லட்சம் பேர் இந்த நாட்டில் இருக்க கூடிய வாய்ப்புள்ளது.
ஜெர்மனி நாட்டில் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
அதனால் எதிர்காலத்தில் பொருளாதார மந்த நிலை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் படி ஜெர்மன் நாட்டில் நிலவுகின்ற பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடைய பற்றைக்குறையை இந்த நடவடிக்கைகளின் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என்றும் இவர் கூறி இருக்கின்றார்.
ஏற்கனவே ஜெர்மன் அரசாங்கமானது கடந்த வாரம் புதிய இலகு பயிற்றப்பட்ட தொழிலாளர்களை ஜெர்மன் நாட்டுக்கு வர அழைப்பு சம்பந்தமான சட்டம் ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.