ஜெர்மனியில் பொதுபோக்குவரத்து பயணிகளுக்கு கடுமையாகும் சட்டம்
ஜெர்மனியில் பொதுபோக்குவரத்து பயணிகளுக்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பயண சீட்டுக்கள் இன்றி பயணம் மேற்கொள்வதாக கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் பொது போக்குவரத்தில் ஈடுப்படுகின்றவர்கள் பெறுமதியான பயண அட்டைகள் இன்றி பயணம் மேற்கொள்பவர்கள் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகின்றது.
இது வரை நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி எவர் ஒருவர் ஒரு வருடத்தில் 3 தடவைகள் இவ்வாறு பெறுமதியான பயண அட்டை இன்றி பொது போக்குவரத்தில் பயணம் மேற்கொண்டால் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும்,
இந்நிலையில் 2 வருடத்தில் 4 தடவைகள் இவ்வாறு பெறுமதியான பயண அட்டைகள் இல்லாது பயணங்கள் மேற்கொண்டால் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்பொழுது நிதி அமைச்சர் மாக்கோஷ் புஷ்மன் அவர்கள் குறித்த சட்டத்தில் பாரிய திருத்தங்களை கொண்டு வருவதற்கு முயற்சி செயது வருவுதாக தெரியவந்துள்ளது.