காசாவிற்கு உதவி வழங்க இஸ்ரேலை ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் கோரிக்கை
புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் வெளியுறவு அ*மைச்சர்கள் கூட்டாக இஸ்ரேலை காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி அனுப்ப அனுமதிப்பதன் மூலம் சர்வதேச சட்டத்தை கடைபிடிக்குமாறு அழைப்பு விடுத்தனர்.
“மனிதாபிமான உதவியை ஒருபோதும் அரசியல் கருவியாகப் பயன்படுத்தக்கூடாது, பாலஸ்தீன பிரதேசம் குறைக்கப்படவோ அல்லது எந்த மக்கள்தொகை மாற்றத்திற்கும் உட்படுத்தப்படவோ கூடாது” என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அனைத்து தரப்பினரும் போர்நிறுத்தத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும், மீதமுள்ள பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க ஹமாஸை அவர்கள் வலியுறுத்தினர்.





