ஜெர்மனியில் ‘ஹாலிவுட் பட’ பாணி கொள்ளை: 1000 கோடி ரூபாக்கும் மேல் அபேஸ்!
ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள ஸ்பர்காஸ் (Sparkasse) வங்கியின் கிளை ஒன்றில், கொள்ளையர்கள் அதிநவீன துளையிடும் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுமார் 35 மில்லியன் டாலர் (இலங்கை:1000 கோடி ரூபாக்கும் மேல், இந்திய:290 கோடி ரூபாக்கும் மேல்) மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையர்கள் வங்கிக்கு அருகிலிருந்த வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து (Parking Garage) வங்கியின் நிலத்தடி பாதுகாப்பு அறை (Vault) இருக்கும் சுவரை நோக்கித் நிலத்தை துளைத்துள்ளனர்.
அவர்கள் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி, வார இறுதி முழுவதும் வங்கியின் உள்ளேயே இருந்து இந்த கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

பாதுகாப்பு அறையிலிருந்த 3,200-க்கும் மேற்பட்ட லாக்கர்களை (Safe Deposit Boxes) உடைத்து, அதில் இருந்த தங்க, வைர நகைகள் மற்றும் பணங்கள் அனைத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையர்கள் அங்கிருந்து கறுப்பு நிற Audi RS 6 காரில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றது சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவாகியுள்ளது. இது மிகவும் தொழில்முறை ரீதியாகத் திட்டமிடப்பட்ட கொள்ளை என்றும், ஹாலிவுட் படமான ‘ஓசான்’ஸ் எலிவேன்’ (‘Ocean’s Eleven’ ) பாணியில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாங்கி கொள்ளையடிக்கப்பட்ட தகவல் பரவியதும், சுமார் 2,500 வாடிக்கையாளர்கள் தங்களின் சேமிப்பை இழந்துள்ளனர். அவர்கள் தங்களின் உடைமைகள் என்னவானது என்று தெரியாமல் வங்கியின் முன் குவிந்ததால் அந்த இடத்தில் பெரும் பதற்றம் நிலவியது





