ஜேர்மன்- குழந்தை உட்பட நால்வரை சுட்டு கொலை செய்த ராணுவ வீரர் !
ஜேர்மனியில் குழந்தை உட்பட நான்குபேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்திலுள்ள Westervesede மற்றும் Bothel என்னும் இடங்களில் அமைந்துள்ள இரண்டு வீடுகளுக்கு பொலிஸார் அழைக்கப்பட்டார்கள். அந்த இரண்டு வீடுகளிலுமாக, ஒரு குழந்தை உட்பட நான்குபேரின் உயிரற்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். முந்தைய இரவு அவர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், அந்த சம்பவங்கள் தொடர்பாக, ராணுவ வீரர் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். அவரைக் கைது செய்துள்ள பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்திவருகிறார்கள்.
இந்த கொலைகளுக்கான காரணம் தெரியவில்லை என்றாலும், அது குடும்பத் தகராறாக இருக்கலாம் என தாங்கள் கருதுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
(Visited 17 times, 1 visits today)





