ஜெர்மனி பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலை
ஜெர்மனியில் மக்கள் அதிகம் வாழும் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் பாலர் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு ஆசிரியர்களின் எண்ணிக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் தங்களது கற்கை நெறியை ஒழுங்காக பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பற்றாக்குறையை நீக்குவதற்காக மாநில அரசாங்கமானது ஒரு புதிய முடிவை எடுத்து இருக்கின்றது.
அதாவது இந்த மாநிலத்தில் உள்ள 10500 பாலர் பாடசாலைகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கு பல நடைமுறையை நியமிக்கவுள்ளது.
அதாவது வெளிநாட்டில் பாலர் பாடசாலைகளுக்கான கல்வி கற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக கற்பிப்பதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
முன்னர் இவ்வாறு வெளிநாட்டில் பாலர் பாடசாலைகளுக்கான கல்வி கற்ற பட்டதாரிகளுக்கு இவ்வாறு உடனடி வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதற்கு காரணம் குறித்த ஒரு அலுவலகத்தில் இவர்களின் தகுதிகள் பற்றி நெறிப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும்,
இந்த நடைமுறையை தற்பொழுது கைவிடுவதற்கு பாராளமன்றமானது ஒப்புதலை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.