ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் சீனா விஜயம்!
ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இன்று (14.4) சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பாக இருதரப்புக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டமான பொருளாதார உறவுகள் மற்றும் வேறுபாடுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தலைநகர் பெய்ஜிங்கிற்குச் செல்வதற்கு முன், சீனத் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் பிரீமியர் லீ கியாங் ஆகியோரைச் சந்திப்பதற்கு முன், ஷாங்காய் நிதி மையத்தையும் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.
BMW மற்றும் Volkswagen போன்ற ஜேர்மன் நிறுவனங்கள் சீன சந்தையை பெரிதும் நம்பியுள்ளன. ஜேர்மனியின் பொருளாதாரம் சீனாவின் முதலீடு மற்றும் கார்கள் முதல் இரசாயனங்கள் வரை உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவற்றிலிருந்து பயனடைந்துள்ளது.
ஆனால் சீன நிறுவனங்களின் போட்டி மற்றும் இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அந்த உறவுகள் சிதைந்துள்ளன. அரசியல் தலையீடும் அன்னிய முதலீட்டில் கடும் வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது.





