ஜெர்மனியில் குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
ஜெர்மனியில் மக்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதை எளிதாக்கும் நோக்கில் உள்துறை அமைச்சகம் புதிய வரைவு சட்டத்தை வெளியிட்டது.
இடம்பெயர்வுகளை அதிகரிக்கவும், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் வேலைச் சந்தையைத் திறக்கவும் முயலும் ஜெர்மனி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
புதிய வரைவிற்கமைய, பல குடியுரிமை விருப்பத்தை முன்மொழிகிறது. ஜெர்மனியில் குடியுரிமை பெறுவதற்கு இதற்கு முன்பு தேவையான வதிவிட ஆண்டுகளாக இருந்த 8 ஆண்டுகளில் இருந்து ஐந்து அல்லது மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படவுள்ளது.
1950ஆம் ஆண்டுகள் மற்றும் 60ஆம் ஆண்டுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக ஜெர்மனிக்கு வந்த காஸ்டார்பீட்டர் தலைமுறையின் உறுப்பினர்களுக்கும், அவர்களில் பலர் துருக்கியர்களுக்கும் குடியுரிமைக்கான ஜெர்மன் மொழித் தேவைகள் எளிதாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கள் சமூகத்தின் ஒரு பகுதியாக மாறிய மக்கள் நமது நாட்டை ஜனநாயக ரீதியாக வடிவமைக்க உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என உள்துறை அமைச்சர் நென்சி பேசர் ஒரு அறிக்கையில் கூறினார்.
அதற்கு கனடா போன்ற நாடுகளின் எடுத்துக்காட்டுகள். ஜெர்மனிக்குத் தேவையான திறமையான தொழிலாளர்களை ஈர்க்க இந்த முன்னோக்கு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜேர்மனிய அரசாங்கம் கடந்த ஆண்டு தனது குடியேற்றச் சட்டத்தை சீர்திருத்துவதற்கான திட்டங்களை ஒப்புக்கொண்டது. பெர்லின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து மிகவும் தேவைப்படும் தொழிலாளர்களுக்கு வேலைச் சந்தையைத் திறக்க முற்படுகிறது.
குழந்தை பராமரிப்பு முதல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் வரையிலான துறைகளில் நூறாயிரக்கணக்கான வெற்றிடங்களை புலம்பெயர்ந்தோரை கொண்டு நிரப்ப ஜெர்மனி எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.