ஜெமினி நானோ பனானா – வைரலாகும் ‘ஏ.ஐ. சாரி’ டிரெண்ட்

அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய ‘நானோ பனானா ஏஐ 3D’ மினியேச்சர்களுக்குப் பிறகு, தற்போது இன்ஸ்டாகிராமில் மற்றொரு புதிய ஏஐ டிரெண்ட் அனைவரையும் ஈர்த்து வருகிறது. அதுதான் ‘பனானா ஏஐ சாரி’ டிரெண்ட்!
கூகுளின் ஜெமினி நானோ பனானா இமேஜ் எடிட்டிங் கருவியைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் சாதாரண செல்ஃபி படங்களை 1990-களின் பாலிவுட் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகள் போல மாற்றியமைக்கிறார்கள். காற்றில் பறக்கும் மெல்லிய ஷிஃபான் புடவைகள், மங்கலான (grainy) தோற்றம் மற்றும் மாலை நேரத்து சூரிய ஒளி போன்ற அந்த காலத்து அம்சங்கள் இந்த படங்களில் தத்ரூபமாக இடம் பெற்றுள்ளன. இந்த மாயாஜால படங்கள் ஏ.ஐ. ப்ராம்ப்ட் மூலம் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக, 1990களில் பிரபலமான ட்ரான்ஸ்பரண்ட் புடவைகளில் போல்கா டாட் டிசைன்கள், பிளாக் பார்ட்டிவேர் புடவைகள், பூ டிசைன்கள் கொண்ட புடவைகள் போன்றவை இந்த டிரெண்டில் மிகப் பிரபலமாக உள்ளன.
ஏ.ஐ. சாரி டிரெண்ட் என்றால் என்ன?
இது உங்கள் தனிப்பட்ட போட்டோக்களை, 1990களின் பாலிவுட் படங்களின் போஸ்டர்களைப் போல மாற்றுகிறது. நிழல்கள், வித்தியாசமான முகபாவங்கள் மற்றும் பின்னணி தோற்றம் போன்ற அம்சங்களுடன் பழைய சினிமா அழகியலை இது அப்படியே கொண்டு வருகிறது.
நீங்களும் ஏ.ஐ. சாரி எடிட் உருவாக்கலாம்!
ஜெமினி அல்லது ChatGPT தளத்தில் உங்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் உள்நுழையுங்கள்.
ஜெமினியில் “Try Image Editing” என்பதைக் கிளிக் செய்து, பனானா ஐகானைத் தேடுங்கள்.
உங்கள் முகம் தெளிவாகத் தெரியும் ஒரு போட்டோவைப் பதிவேற்றம் செய்யுங்கள்.
இப்போது, ஏ.ஐ. ப்ராம்ப்ட் உள்ளிட வேண்டும். உதாரணத்துக்கு: “இந்த நபரை, 90களின் சினிமா அழகியலில், ரெட்ரோ தோற்றத்துடன், ஆனால் பிரகாசமான படமாக மாற்று. பிளாக் பார்ட்டிவேர் புடவை, மாலை நேரத்து தங்க ஒளியமைப்புடன் பொலிவுடன் இருக்கட்டும்.” நீங்கள் ப்ராம்ப்ட் உள்ளிட்டதும், ஏ.ஐ. ஒரு நொடியில் உங்கள் புகைப்படத்தை 90’ஸ் ஸ்டைலில் மாற்றித் தரும்.
இந்த புதிய டிரெண்ட் சமூக ஊடகங்களை புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. நீங்களும் உங்கள் புகைப்படத்தை மாற்றிப் பார்த்து, 90களின் கனவு உலகில் பயணிக்கத் தயாராகுங்கள்.