தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி வர்த்தமானி

தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று (21) வெளியிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் முதலாம் திகதி அறிவித்தார்.
இதன்படி தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 1350 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன் உற்பத்தித்திறன் அடிப்படையில் அவர்களுக்கு 350 ரூபாவை வழங்கப்படவுள்ளது.
(Visited 23 times, 1 visits today)