கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, கோதுமை மா ‘குறிப்பிட்ட பொருட்கள்’ என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதன்படி, மக்களின் அத்தியாவசியப் பொருளான கோதுமை மா, கடந்த 16ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், குறிப்பிட்ட பொருட்களின் வகையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்களின் இருப்பு சந்தையில் தட்டுப்பாடு இன்றி பராமரிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 8 ஜூலை 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட பொருளாக இருந்த எரிவாயு, பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.