உதவிப் பொருட்களுக்காக அவதிப்டும் காசா மக்கள்
காசா பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் உதவிப் பொருட்களைப் பெறுவதற்காகக் கிடங்குகளில் புகுந்து, அங்குள்ள கிடங்குகளை உடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா.வின் நிவாரண நிறுவனம், மாவு மற்றும் சோப்பு போன்ற அடிப்படை பொருட்களை சேமித்து வைத்திருந்த கிடங்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இந்த நிலை சிவில் அமைதி சீர்குலைந்ததன் தொடக்கத்தின் அறிகுறி என்றும் இது வருத்தமளிக்கிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் வேளையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல காசா மக்கள் உணவு மற்றும் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், பலர் இன்னும் அழுக்கு நீரைக் குடித்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உதவி லாரிகள் எகிப்து எல்லை வழியாக காசாவுக்குள் நுழைந்தாலும், போதுமான டிரக்குகள் இல்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் உள்ள 2.4 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.