காசா போர் : நிலையான போர்நிறுத்தத்திற்கு பிரித்தானியா அழைப்பு
காஸாவில் சண்டையை நிறுத்துவதற்கும், கூடுதல் உதவிகளைக் கொண்டுவருவதற்கும் ஒரு ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அங்கு அடைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும்.
இரண்டு மாதங்களில் தனது மூன்றாவது மத்திய கிழக்கு பயணத்தின் போது கேமரூன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிற தலைவர்களை சந்தித்தார்.
இஸ்ரேல், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரை, மேற்கத்திய ஆதரவுடைய பாலஸ்தீனிய ஆணையம், கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் நடந்த கூட்டங்களில் நிலையான போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)