திருமணத்திற்கு முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த காசா பத்திரிகையாளர்
காசாவைச் சேர்ந்த 25 வயது பாலஸ்தீன புகைப்பட பத்திரிகையாளரான பாத்திமா ஹசௌனா, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கடந்த 18 மாதங்களாக தன்னைச் சுற்றியுள்ள போரை விவரித்து வந்த ஹசௌனா, திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டார்.
வடக்கு காசாவில் உள்ள அவரது வீட்டைத் தாக்கிய இந்த தாக்குதலில், அவரது கர்ப்பிணி சகோதரி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததாக தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
ஹசௌனா தனது வேலையின் அபாயங்கள் மற்றும் மோதல் மண்டலத்தில் இருப்பதன் ஆபத்துகள் குறித்து நீண்ட காலமாக அறிந்திருந்தார். இருப்பினும், அவற்றை நேரடியாக எதிர்கொள்ளத் தேர்ந்தெடுத்தார்.





