ஐரோப்பா செய்தி

குழந்தைகளின் புதைகுழியாக மாறி வரும் காசா

காசா குழந்தைகளின் புதைகுழியாக மாறி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

காசா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள பின்னணியில் அவர் இவ்வாறு கூறினார்.

காசா பகுதிக்கு மனிதாபிமான போர் நிறுத்தத்தை அறிவிப்பது இன்றியமையாதது என்றும், ஒவ்வொரு மணி நேரமும் அதன் தேவை அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நேற்று மட்டும் காசாவில் உள்ள 450 ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேலிய தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,022 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 4,104 பேர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!