காஸா மருத்துவமனையில் தாக்குதல் – மரணங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இஸ்ரேல் காஸாமீது நடத்திய தாக்குதல்களில் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 10,000த்தைத் தாண்டிவிட்டது.
காஸா சுகாதார அமைச்சு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இதுவரையில்லாத அளவு நேற்றிரவு இஸ்ரேலிய ராணுவம் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தியது.
காஸா சிட்டியின் அல் ஷிஃபா (Al-Shifa) மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஸாவில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் அவசர மருத்துவ வாகனங்களை அழைக்க இயலவில்லை. கழுதைகள் பூட்டப்பட்ட வண்டியில் காயமடைந்தோர் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காஸா வட்டாரத்தை இரண்டு துண்டுகளாக்கி விட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. காஸாவில் மனிதநேயப் பணிகளைத் தொடர உடனடிப் போர் நிறுத்தம் தேவை என்று ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதில் 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமானோரை ஹமாஸ் குழு பிணை பிடித்துச் சென்றது.
அவர்களை மீட்பதற்காக சுமார் ஒரு மாதமாக இஸ்ரேல் காஸாவில் தாக்குதல் நடத்தி வருகிறது.