பிரான்ஸில் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு – 02 சிறுவர்கள் பலி!
பிரான்சின் ட்ரெவோக்ஸில் (Trévoux) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியொன்றில் எரிவாயு கசிவு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
03, 05 வயதுடைய 02 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு வெடித்ததே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக அக்கட்டிடத்தில் வசித்து வந்த 70 குடும்பங்களும், அதன் அருகில் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்களும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





