சுவிட்ஸர்லாந்தில் வாழ்க்கைச் செலவு அதிகம் – பூனை உணவைச் சாப்பிடும் மாணவன்

சுவிட்ஸர்லாந்தில் கற்கும் சீன மாணவர் ஒருவர் பணத்தை மீதப்படுத்துவதற்காக பூனை உணவைச் சாப்பிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மாணவர் சுவிட்ஸர்லாந்தில் பட்டம் பெறுவதற்காக கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
எனினும் சுவிட்ஸர்லாந்தில் வாழ்க்கைச் செலவினம் அதிகம் எனவும் சட்டப்படி வெளிநாட்டு மாணவர்களால் வேலை செய்யமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பணமில்லாததால் பலரும் படிப்பைப் பாதியில் கைவிடுவதையும் அவர் கூறினார்.
தாம் சுவிட்ஸர்லந்தில் வாழும் மிகவும் சிக்கனமான சீனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் இலவசமாக உணவு பெற இரத்த தானம் செய்தார். புரதச்சத்தைப் (protein) பெற அவர் பூனைகளுக்கான உணவைச் சாப்பிட்டார்.
பூனை உணவு அவரது தலைமுடியை மெருகேற்றியதாகக் கூறினார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.