மாஸ்கோ தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்
மாஸ்கோவின் குரோகஸ் சிட்டி ஹால் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி மாளிகையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் அன்புக்குரியவர்கள் மற்றும் அனைத்து ரஷ்ய மக்களுக்கும் பிரான்ஸ் தனது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.” என்று தெரிவித்தார்.
ரஷ்ய அதிகாரிகளின் சமீபத்திய கணக்கின்படி, தாக்குதலில் குறைந்தது 133 பேர் கொல்லப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மாஸ்கோவின் வடக்கு புறநகர் பகுதியில் ஒரு ராக் இசை நிகழ்ச்சிக்காக மண்டபத்தில் இருந்தனர், இசை தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஆயுதமேந்திய தாக்குதல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.





