பாரிஸ் நகருக்குள் செல்லும் முக்கிய சாலைகளை முற்றுகையிட தயாராகும் விவசாயிகள்
பிரான்ஸ் விவசாயிகள் பாரிஸ் நகருக்கு செல்லும் முக்கிய சாலைகளை மறிக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இடத்திற்கு நூற்றுக்கணக்கான உழவு இயந்திரங்களை கொண்டு சென்று இந்த வீதிகளை மறிக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வருமானம் வீழ்ச்சி மற்றும் இறக்குமதி போட்டிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, நாட்டின் மற்ற இடங்களில் இதே போன்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
பல்பொருள் அங்காடிகளுக்கு உணவு வழங்குவதை நிறுத்துவதே தமது நோக்கம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிராக்டர்கள் பாரிஸ் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்குள் நுழைவதைத் தடுக்க சுமார் 15,000 பொலிசார் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறுகின்றனர்.