ரணிலை ஆதரிக்க சுதந்திரக் கட்சி முடிவு

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (31) அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுதந்திரக் கட்சியின் அரசியல் சபை மற்றும் மத்திய குழு ஒன்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே தமக்கு ஆதரவளிக்குமாறு சுதந்திரக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது கட்சியின் பிரேரணையை ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 23 times, 1 visits today)