ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு : சாந்தன் இலங்கை ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான சாந்தன், இலங்கை ஜனாதிபதியிடம் தாம் நாட்டிற்கு திரும்பி தனது வயதான தாயுடன் வாழ உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிய மனுவில், தாம் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் அல்லது சரியான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு பிரஜைகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சாந்தன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது தனது தாயை சந்திக்க முடியாமல் போனதால், இலங்கை சென்று தனது தாயை கவனித்துக் கொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கான மனுக்கள் உயர்ஸ்தானிகராலயத்தில் நிலுவையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.