இலங்கையில் தனிப்பட்ட கணக்குகளை குறிவைத்து இடம்பெறும் மோசடி : பொலிஸார் விடுத்துள்ள அவசர செய்தி!
இலங்கையில் அதிகரித்து வரும் ஒன்லைன் மோசடிகளுக்கு மத்தியில், ஒன்லைன் மோசடி செய்பவர்கள் தனிப்பட்ட கணக்குகளை மட்டுமே ஊருடுவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வங்கி அமைப்புகள் அல்லது நிதி நிறுவனங்களின் கணக்குகளை ஊடுருவல் செய்த சம்பவங்கள் இலங்கையில் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு நபர்களின் தனிப்பட்ட கணக்குகளை ஊடுவல் செய்த பல சம்பவங்களில் பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்பவர்களால் மோசடி செய்யப்பட்டதாக பதிவாகியுள்ளது.
முன்னணி தனியார் வங்கியொன்றின் தனிப்பட்ட கணக்கு அண்மையில் ஊடுருவல் செய்யப்பட்டு சுமார் 80 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக அவர் கூறினார். தனிநபர்கள் தங்கள் பொறுப்பற்ற நடத்தை மற்றும் அலட்சியத்தால் இந்த மோசடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளுக்கும் வங்கிகளுக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை.
சமீப நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சைபர் முகாம்களில் சோதனை நடத்தி 500 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 250 மடிக்கணினிகளை கைப்பற்றியதுடன் சீன மக்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.