ஆஸ்திரேலியாவில் புலம்பெயர் மக்களிடம் மேற்கொள்ளப்படும் மோசடி : பொலிஸார் எச்சரிக்கை!

ஆஸ்திரேலியா – விக்டோரியாவில் சீன மொழி பேசும் சமூகத்தினரிடமிருந்து மில்லியன் கணக்கான டாலர்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்க அதிகாரிகள், காவல்துறை மற்றும் கூரியர் சேவைகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் குற்றவாளிகள் WeChat மற்றும் WhatsApp உள்ளிட்ட சமூக ஊடக நெட்வொர்க்குகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்கிறார்கள் என்று விக்டோரியா காவல்துறை கூறுகிறது.
மோசடி செய்பவர்கள் அரசாங்க அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு, மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் மாண்டரின் மொழியில் பதிவுசெய்யப்பட்ட செய்தி அனுப்பப்பட்டு, அவர்களிடம் ஒரு பார்சல் இருப்பதாகவும், அவசரமாகத் திரும்ப அழைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
சில பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பார்சலில் போலி கிரெடிட் கார்டுகள் அல்லது பாஸ்போர்ட்கள் போன்ற சட்டவிரோத பொருட்கள் இருப்பதாகவோ அல்லது யாரோ ஒருவர் தங்கள் அடையாளத்தை சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதாகவோ கூறப்பட்டுள்ளது. மேலும் சிலர் நாடுகடத்தப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆகவே இவ்வாறான போலி அழைப்புகளுக்கு ஏமாற வேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.