இலங்கை செய்தி

ஜேர்மனியில் வசிக்கும் நபரின் யாழில் உள்ள காணியில் மோசடி

ஜேர்மன் நாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் காணியை மோசடி செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தற்போது ஜேர்மன் நாட்டில் வசித்து வருகின்றார்.

அவருக்கு சொந்தமான காணி ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ளது. அந்த காணியை மோசடியாக கை மாற்றியுள்ளனர்.

இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ் , மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காணி உரிமையாளர் நாட்டில் இல்லாத கால பகுதியிலையே உரிமையாளரின் போலி கையெழுத்தினை வைத்து காணியை மோசடி செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அந்நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் மேலும் இருவரை நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர்

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்திய போது, இருவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!