ஜெர்மனி குடிவரவு அலுவலகங்களில் நடக்கும் மோசடிகள் அம்பலம் – குற்றவாளிகளுக்கு குடியுரிமை
ஜெர்மனியில் குடிவரவு அலுவலகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளன.
பேட் ஹோம்பர்க், ஹெஸ்ஸே (Bad Homburg, Hesse) நகரில் உள்ள குடிவரவு அலுவலகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு குற்றவாளிகளுக்கு குடியுரிமை அனுமதியும் வழங்கப்படுவதாக கண்டுபிடி்ககப்பட்டுள்ளது. இது தொடர்பில் 30 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,அது தொடர்பில் விசாணைகள் இடம்பெற்று வருகின்றன.
ஹோக்டவ்னோஸ் (Hochtaunus) மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகிகள், குடியேற்ற அதிகாரிகள் ஊடாக இவ்வாறு குற்றவாளிகளுக்கு குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சட்ட நிறுவனம் ஒன்று விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மனியில் இன்னும் தங்க அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவர் கொலைக் குற்றவாளி என தெரியவந்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷைச் சேர்ந்த குறித்த நபர் 1995 ஆம் ஆண்டு ஒரு நபரை சுட்டுக் கொலை செய்துள்ளார். அதற்காக அவர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.