ஐரோப்பா செய்தி

பிரான்ஸின் தொடர் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்ஸின் முன்னாள் மயக்க மருந்து நிபுணர் ஒருவர், 30 நோயாளிகளுக்கு விஷம் கொடுத்தமைக்காக  ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

இதன் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெசன்சோன் (Besançon) நகர நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஃபிரடெரிக் பெச்சியர் (Frédéric Péchier) என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குறித்த மருத்துவர், மாரடைப்பு அல்லது இரத்தப்போக்கை ஏற்படுத்தும் விஷ ஊசிகளை பயன்படுத்தி நோயாளிகளை கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெச்சியர் (Péchier) நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.

பெச்சியரை ‘தொடர் கொலையாளி’ மற்றும் ‘பிரெஞ்சு சட்ட வரலாற்றில் மிகப்பெரிய குற்றவாளிகளில் ஒருவர்’ என்று வழக்கறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!