செப்டம்பர் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை விதிக்க பிரான்ஸ் திட்டம்
பிரான்ஸ்(France) செப்டம்பர் 2026 முதல் சமூக ஊடக தளங்களில் இருந்து 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தடை செய்யவும் உயர்நிலைப் பாடசாலைகளில் தொலைபேசிகளை தடை செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் சிறார்களுக்கு இணைய பாதிப்புகளின் தாக்கம் குறித்து அதிகரித்து வரும் பொதுமக்களின் கோபத்துக்கு மத்தியில் வருகிறது.
இந்நிலையில், இளைஞர்களிடையே வன்முறைக்கு சமூக ஊடகங்களும் ஒரு முக்கிய காரணம் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்(Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவைப்(Australia) பின்பற்ற பிரான்ஸ் விரும்புவதாகவும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாகடந்த ஆண்டு டிசம்பர் 10ம் திகதி முதல் உலகின் முதல் சமூக ஊடக வயதுக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு பேஸ்புக்(Facebook), ஸ்னாப்சாட்(Snapchat), டிக்டோக்(TikTok) மற்றும் யூடியூப்(YouTube) உள்ளிட்ட பல சமூக ஊடக தளங்கள் தடை விதிக்கப்பட்டது.





