ஐரோப்பா

பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையக்கூடும்; தீவிர வலதுசாரி கட்சி ஏமாற்றம்

பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜூன் 30ஆம் திகதி முதல் சுற்று வாக்களிப்புக்குப் பிறகு தீவிர வலதுசாரி கட்சியான நேஷனல் ரேலி (ஆர்என்) அபார வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜூலை 8ஆம் திகதி அதிகாலை இரண்டாம் மற்றும் கடைசி சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, இடதுசாரி கட்சியான நியூ பொப்பியூலர் ஃபிரண்ட் (என்எஃப்பி) ஆக அதிக இடங்களைக் கைப்பற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. அக்கட்சி 182 தொகுதிகளை வென்றுள்ளது.

பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனின் கட்சி 168 தொகுதிகளைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தீவிர வலதுசாரி கட்சியான ஆர்என் 143 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாகவும் அவை பிரெஞ்சு மக்களின் எண்ணங்களையும் விருப்பத்தையும் பிரதிபலிக்கவில்லை என்றும் தீவிர வலதுசாரி கட்சியான ஆர்என்னின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

(Visited 33 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்