கேரளாவில் நால்வர் தற்கொலை – பின்னணியில் இருக்கும் இலங்கை தொலைபேசி இலக்கம்
இந்தியாவின் கேரள மாநிலம் கடமக்குடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் உடனடி கடன்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையை தளமாகக் கொண்ட குற்றவியல் வலையமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக இந்திய புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த நால்வரும் கடந்த மாதம் 12ஆம் திகதி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு வட்ஸ்அப் மூலம் ஆபாசமான செய்திகளை அனுப்பிய தொலைபேசி இலக்கம் இலங்கையைச் சேர்ந்தது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரள மாநிலம், கடமக்குடி பகுதியைச் சேர்ந்த 39 வயதான நிஜோ ஜானி, அவரது மனைவி ஷில்பா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளான 7 வயது ஈபெல் மற்றும் 05 வயதான எரோன் ஆகியோரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இறந்தவர்களில், உறவினர்களுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்ப பயன்படுத்திய தொலைபேசி எண்ணை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட ஷில்பா என்ற பெண், சில இணையத்தள கடன் வழங்கும் நிறுவனங்களில் உடனடி கடன்களை பெற்றதாகவும், பின்னர் திருப்பிச் செலுத்த முடியாமல் போனதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இது தொடர்பான கடன் வழங்கும் நிறுவனம் ஷில்பா மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியுள்ளதாகவும், அந்தச் செய்திகள் வந்த தொலைபேசி இலக்கத்தை ஆராய்ந்தபோது அது இலங்கை இலக்கம் எனத் தெரியவந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இந்த குழு இலங்கையில் இருந்து செயற்பட்டிருக்கலாம் என இந்திய பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஷில்பாவின் கையடக்க தொலைபேசியை இதுவரை பொலிசார் திறக்கவில்லை என்றும், அதில் உள்ள டேட்டாவை அணுக வேண்டியதன் காரணமாக கடவுச் சொல்லை உடைக்காமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.